வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி; வியாபாரி கைது
வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வியாபாரி கைது செய்யப்பட்டார்.
சுரண்டை:
சுரண்டை அருகே உள்ள அச்சங்குன்றம் கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 30). இவர் ஊா் ஊராக சென்று சலவைசோப்பு வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்னிதம் சேர்ந்தமரம் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றார். அப்போது, ஒரு வீட்டில் இளம்பெண் தனியாக இருப்பதை அறிந்த கருப்பசாமி குடிக்க தண்ணீர் கேட்டார். அந்த இளம்பெண் தண்ணீர் எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றார். அப்போது, கருப்பசாமி திடீரென்று வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.
இதுகுறித்து அந்த இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் சேர்ந்தமரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தார்.