கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயற்சி: 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-09-18 13:26 GMT

கூடலூரில் இருந்து குமுளி வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள், காய்கறி ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக உத்தமபாளையம் பறக்கும் படை துணை தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படை துணை தாசில்தார் முத்துக்குமார் தலைமையில் அதிகாரிகள் கூடலூர் பகுதியில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 5-வது வார்டு முனியாண்டி கோவில் தெரு பகுதியில் சாலையோரத்தில் 11 மூட்டைகள் கிடந்தன.

அதனை பிரித்து பார்த்தபோது மூட்டைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. பின்னர் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து உத்தமபாளையம் நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கில் ஒப்படைத்தனர். கடத்தி வந்தவர்கள் யார் என்று தெரியவில்லை. விசாரணை நடத்தியதில் கூடலூரில் இருந்து கேரளாவிற்கு கடத்தி செல்வதற்காக மர்ம நபர்கள் ரேஷன் அரிசி மூட்டைகளை போட்டு சென்றது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்