வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி
வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி
கன்னியாகுமரி அருகே உள்ள கலைஞர் குடியிருப்பை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது59). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டார். மகன் வெளி மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். மகள் திருமணம் முடிந்து பக்கத்து ஊரில் வசித்து வருகிறார். இதனால் வீட்டில் விஜயலட்சுமி மட்டும் தனியாக தங்கியுள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் விஜயலட்சுமி வீட்டை பூட்டி விட்டு தனது மகள் வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் விஜயலட்சுமியின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விஜயலட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் வீட்டுக்கு விரைந்து வந்தார்.
இதுகுறித்து கன்னியாகுமரி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் பீரோவை உடைத்து அதில் நகை, பணம் ஏதாவது இருக்கிறதா? என தேடியுள்ளனர். அவர்கள் கையில் எதுவும் சிக்கவில்ைல. இதனால், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
ஆனால் பீரோவின் ரகசிய அறையில் 5½ பவுன் நகை இருந்தது. அது மர்ம நபர்களின் கண்ணில் படாததால் தப்பியது. மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரிய வந்தது.
தொடர்ந்து ைகரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.