மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றார்.

Update: 2023-05-10 20:30 GMT

மேச்சேரி அருகே உள்ள மேல்சிந்தாமணியூரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 40). மாற்றுத்திறனாளியான இவர், நேற்று காலை மூன்று சக்கர மொபட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் தனது மொபட்டில் கேனில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பெட்ரோல் கேனை பறித்து விசாரணை நடத்தினர். அதில், மாற்றுத்திறனாளி கோபிநாத்தின் பூர்வீக சொத்தான 2 ஏக்கர் நிலத்தை உறவினர்கள் அபகரித்து விற்பனை செய்துவிட்டனர். அவர்களிடம் இருந்து அந்த நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என போலீசில் புகார் அளித்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் பெட்ரோலுடன் வந்தேன், என்றார். இதையடுத்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவை கைவிடுமாறு அவரிடம் போலீசார் அறிவுறுத்தினர். மேலும், நில அபகரிப்பு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்