மோட்டாரை திருட முயற்சி
பட்டுக்கோட்டை அருகே மோட்டாரை திருட முயன்றதாக 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார்(வயது40). விவசாயி. இவருக்குச் சொந்தமான மோட்டார் பம்ப் செட் வீட்டுக்கு அருகில் உள்ளது. சம்பவத்தன்று இரவு மோட்டார் பம்ப் செட் அருகில் சத்தம் கேட்டதால் உதயகுமார் அங்கு சென்று பார்த்தார். அங்கு சிலர் அவருடைய மின் மோட்டாரை திருட முயற்சி செய்தது தெரியவந்தது. உடனே ஊர்மக்கள் உதவியுடன் அவர்களை பிடித்த உதயகுமார் பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் முத்துப்பேட்டை அருகில் உள்ள சித்தமல்லி கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் அஜித்(20), ஆனந்தராஜ் மனைவி வெள்ளையம்மாள் (வயது 30), சக்தி மனைவி வசந்தி (25) என தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் பட்டுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.