டாக்டர் வீட்டில் திருட முயற்சி

டாக்டர் வீட்டில் திருட முயற்சி நடந்துள்ளது.

Update: 2023-08-23 19:04 GMT

கரூர் திருமாநிலையூர் அருகே உள்ள ஆதிமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகுடீஸ்வரன் (வயது 33). டாக்டரான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டின் முன்பக்க கதவை திறக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால்எழுந்த மகுடீஸ்வரன், ஜன்னல் வழியாக வெளியே பார்த்துள்ளார். அப்போது 3 மர்மநபர்கள் கதவின் பூட்டை திறந்து ெகாண்டிருந்தனர். இதையடுத்து மகுடீஸ்வரன் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இவரது சத்தம் கேட்டு மர்மநபர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மகுடீஸ்வரன் கொடுத்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்