மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் செல்போன் திருட முயற்சி

நாகூரில் மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் மர்ம நபர்கள் செல்போனை திருட முயன்றனர்.

Update: 2022-07-30 16:23 GMT

நாகூர்:

நாகூர் மணவரா வடபுறம் தெருவை சேர்ந்த சித்திக் (வயது 57).இவர் நேற்று முன்தினம் இரவு நாகையில் இருந்து நாகூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், சித்திக் பாக்கெட்டில் வைத்து இருந்த செல்போனை திருட முயன்றுள்ளனர். இதனால் அவர் சத்தம் போட்டதால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள், சித்திக் வந்த மோட்டார் சைக்கிளை உதைத்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்