விழுப்புரம் அருகேபணம் கேட்டு தாயை கத்தியால் குத்திக்கொல்ல முயற்சி :கூலித்தொழிலாளி கைது

விழுப்புரம் அருகே பணம் கேட்டு தாயை கத்தியால் குத்திக்கொல்ல முயன்ற கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-26 18:45 GMT


விழுப்புரம் அருகே உள்ள வி.அரியலூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவராஜ் மனைவி ராணி (வயது 50). இவர், தங்கள் ஒரு ஏக்கர் நிலத்தை ரூ.30 ஆயிரத்துக்கு அடமானம் போட்டு பணத்தை வைத்துள்ளார். ராணியின் மகன் இன்பராஜ் (31) கூலி வேலை செய்து வருகிறார். இவர் திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனமாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் ராணி, நேற்று முன்தினம் விழுப்புரம் ஜானகிபுரம் அங்காளம்மன் கோவில் அருகே பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இன்பராஜ், தனது தாயிடம் சென்று நீங்கள் வைத்துள்ள பணத்தில் பங்கு தரும்படி கேட்டு பிரச்சினை செய்தார். அதற்கு ராணி, பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

தாயை கொல்ல முயற்சி

இதனால் ஆத்திரமடைந்த இன்பராஜ், தனது தாய் என்றுகூட பாராமல் அவரை திட்டி தாக்கியதோடு தான் வைத்திருந்த கத்தியால் முதுகில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்து வலியால் அலறி துடித்த ராணியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து ராணியின் மகள் இன்பநிலா, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்பராஜ் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்