சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி:போக்சோவில் முதியவர் கைது
தேவதானப்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலை நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் காமாட்சி (வயது 77). நேற்று முன்தினம் இவர், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் காமாட்சி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.