பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி: மின்வாரிய ஊழியர் கைது

பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றதாக மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-03 20:02 GMT

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள ஆர்.சி.நந்தன்குளம் ராயப்பர் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 50). இவர் உதயத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு பெண்ணை ஆபாசமாக பேசி மானபங்கப்படுத்த முயற்சித்ததாகவும், அதை தடுத்தபோது தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் திசையன்விளை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் உதயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மின்சார வாரிய ஊழியர் குமாரை கைது செய்தார் காயம் அடைந்த பெண், ராதாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்