சிறுமியை எரித்து கொல்ல முயற்சி: வாலிபர் சிறையில் அடைப்பு
சிறுமியை எரித்து கொல்ல முயன்ற வழக்கில் வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்
சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 19). இவர், 7 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்து எரித்து கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 70 சதவீத தீக்காயத்துடன் சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சின்னமனூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். இதையடுத்து அவர் தேனி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டாா்.