அனுமதியின்றி பாறை உடைக்க முயற்சி

அருமனை அருகே அனுமதியின்றி பாறை உடைக்க முயற்சி

Update: 2023-06-14 20:26 GMT

அருமனை, 

அருமனை அருகே உள்ள புலியூர்சாலை ஆயவிளை பகுதியில் அனுமதியின்றி பாறை உடைப்பதாக அருமனை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் பாறை உடைக்க பயன்படுத்தும் வாகனம் மற்றும் 15 வெடிமருந்து குச்சிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சுபின்குமார் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் குமாரதாஸ் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்