விவசாயியை தாக்கி கொலை மிரட்டல்தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு

விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-08-15 18:45 GMT

திருக்கோவிலூர், 

கண்டாச்சிபுரம் அருகே உள்ள அடுக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 62). விவசாயி. இவருக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் சிங்காரவேல் மகன் கார்த்தி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று கார்த்தி, ராஜாமலை மகன் சிவராஜ், கார்த்தி மனைவி கோமதி ஆகியோர் ஒன்று சேர்ந்து முன்விரோதம் காரணமாக ஏழுமலையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கார்த்தி, கோமதி உள்பட 3 பேர் மீது கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்