வாலிபர்களை தாக்கியவனத்துறையினர் மீது நடவடிக்கை:விவசாயிகள் வலியுறுத்தல்

வருசநாடு அருகே வாலிபர்களை தாக்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2023-06-27 18:45 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கர்னல் ஜான் பென்னிகுயிக் பாரம்பரிய மலைமாடுகள் வளர்ப்போர் சங்க தலைவர் கென்னடி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் நேற்று வந்தனர். அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதியிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அதில், 'வருசநாடு அருகே மஞ்சனூத்து வனத்துறை சோதனை சாவடியில், மோட்டார் சைக்கிளில் வந்த விவசாயி ராசு என்பவரின் மகன்கள் மகேந்திரன் (வயது 27), சாமிநாதன் (20) ஆகியோரை வனத்துறையினர் கொடூரமாக தாக்கியுள்ளனர். பின்னர் மேகமலை வனச்சரகர் அலுவலகத்தில் வைத்தும் தாக்கினர். இதில் மகேந்திரன் பலத்த காயம் அடைந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மோட்டார் சைக்கிளில் வந்ததற்காக வனத்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே தாக்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்