அரிவாளால் தாக்கியவர் கைது
நெல்லை அருகே அரிவாளால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே உள்ள முத்தூர் ஜெயாநகரை சேர்ந்தவர் ராமையா (வயது 59). இவரது ஆட்டுக்குட்டி காணவில்லை. இதுகுறித்து அவர் சிவந்திபட்டி கார்மேகனார் தெருவைச் சேர்ந்த ராஜா (62) என்பவரிடம் கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த ராமையாவை, ராஜா அவதூறாக பேசி, அரிவாளால் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராமையா சிவந்திபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜை கைது செய்தார்.