கத்தியால் தாக்கி செல்போன் பறிப்பு

கத்தியால் தாக்கி ஒருவரிடம் செல்போன் பறிக்கப்பட்டது.

Update: 2022-11-09 20:01 GMT

திருச்சி வரகனேரி நித்தியானந்தபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 48). இவர் சம்பவத்தன்று வரகனேரியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கிக்கொண்டிருக்கும்போது அங்கு வந்த 3 மர்மநபர்கள் அவரை கீழே தள்ளி கத்தியால் தாக்கி செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்