தொழிலாளியை தாக்கி ெகாலை மிரட்டல்: ரவுடி கைது
முறப்பநாட்டில் தொழிலாளியை தாக்கி ெகாலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம்:
முறப்பநாட்டில் வீட்டை சேதப்படுத்தி தொழிலாளியை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
வீடுபுகுந்து தாக்குதல்
முறப்பநாடு அகரம் தெற்கு தெருவை சேர்ந்த பண்டாரம் மகன் பலவேசம் (வயது 44). தொழிலாளி. இவருக்கும் முறப்பநாடு அகரம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ரெங்கராஜன் (32) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 6-ந் தேதி இரவு ரெங்கராஜன், கூட்டாளி ஒருவருடன் பலவேசத்தின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்துள்ளார்.
அந்த வீட்டில் இருந்த டிவி, மின்விசிறி ஆகியவற்றை உடைத்தும், மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்தும் சேதப்படுத்தி உள்ளனர். பின்னர் பலவேசத்தை தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்து விட்டு ரெங்கராஜனும், கூட்டாளியும் தப்பி ெசன்று விட்டனராம்.
கைது
இதுகுறித்து பலவேசம் அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ் வழக்குப்பதிவு செய்து ரெங்கராஜனை கைதுசெய்தார்.
கைதான ரெங்கராஜன் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது முறப்பநாடு போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், நெல்லை மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் மோசடி வழக்கு உட்பட 2 வழக்குகளும், மேலப்பாளையம் ேபாலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், நெல்லை டவுண் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.