கோவில்பட்டியில்பெண் மீது தாக்குதல்; 7 பேர் கைது
கோவில்பட்டியில்பெண் மீது தாக்குதல் நடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வசந்த்நகரில் குடியிருப்பவர் சந்திரவேல் மகன் குரு தேவன் (வயது 25). இவர் பா.ஜனதா அரசு பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு புது கிராமம் 4-வது தெருவில் உள்ள பா.ஜனதா கொடி கம்பத்தில் உள்ள கொடியை சிலர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக குருதேவன் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்த்நகரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன்கள் கார்த்திக் (32), நாகராஜ் (21) மற்றும் கணேசமூர்த்தி மகன் லட்சுமணன் (22) ஆகியோரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக கைதான கார்த்திக்கின் தம்பி வேலுச்சாமி (20), அண்ணன்கள் ஜெயராம் (37), கணேசன் (35) மற்றும் பால்குட்டி (29), மணிகண்டன் (27), சூர்யா (20) ஆகியோர் குருதேவன் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
அங்கு குருதேவன் வீட்டில் இல்லாததால் அவருடைய தாயார் துளசி லட்சுமி (47) என்பவரை தாக்கி, மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக துளசி லட்சுமி, கிழக்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் வேலுச்சாமி (20), ஜெயராம் (37), பால்குட்டி (29), மணிகண்டன் (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தார்கள். தலைமறைவான கணேசன், சூர்யாவை தேடி வருகிறார்கள்.