போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தகாதல் ஜோடி மீது தாக்குதல்பிரம்மதேசத்தில் பரபரப்பு

போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி யை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-28 18:45 GMT


பிரம்மதேசம்,

திண்டிவனம் அடுத்த கீழ் நெமிலி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி மகன் ராஜதுரை (வயது 30). இவர் கீழ் பூதேரி கிராம மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காளி மகள் மாலினி (28), என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி, சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் பெண்ணின் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு பிரம்மதேசம் போலீஸ் நிலைத்தில் தஞ்சமடைந்தனர்.

அப்போது பெண்ணின் சகோதரர் பழனி (29), என்பவர் போலீசாரின் கண் முன்னே வைத்து, அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ராஜதுரை அளித்த புகாரின் பேரில் போலீசார் பழனி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்