போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்

தேனியில் போலீஸ் ஏட்டை தாக்கிய ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-12 19:00 GMT

தேனி ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் அபுதாகிர் (வயது 45). மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை இவர் தேனி-பெரியகுளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்போனுக்கு அழைப்பு வந்தது. இதனால், அவர் தேனி போலீஸ் நிலையம் அருகில் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சுக்குவாடன்பட்டியை சேர்ந்த ஆண்டவர் (45), தேனியை சேர்ந்த ராஜா மகன் நாகராஜ் (29) ஆகியோர் ஒரு ஆட்டோவில் வந்தனர். ஆட்டோவை நாகராஜ் ஓட்டி வந்தார். செல்போனில் பேசிக் கொண்டிருந்த அபுதாகிரிடம், சாலையைவிட்டு தள்ளிச் சென்று செல்போனில் பேசுமாறு தகராறு செய்தனர். திடீரென அவர்கள் இருவரும் அவரை தாக்கினர். உடனடியாக அவர் இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆண்டவர், நாகராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்