மானாமதுரையில் பயணி மீது தாக்குதல்; அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் பணியிடை நீக்கம்

மானாமதுரையில் பயணி மீது தாக்குதல் நடத்திய அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2023-07-19 19:10 GMT

காரைக்குடி

அரசு போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டலத்தின் கீழ் உள்ள சிவகங்கை கிளையில் அதே பகுதியை சேர்ந்த ஜெயராமு டிரைவராகவும், மயில் பாண்டியன் கண்டக்டராகவும் பணியாற்றி வந்தனர். சம்பவத்தன்று இருவரும் இளையான்குடியில் இருந்து மானாமதுரை வழியாக சிவகங்கைக்கு பஸ்சை இயக்கினர். மானாமதுரை பஸ் நிலையத்திற்கு இரவு 10 மணிக்கு அந்த பஸ் வந்தது. அங்கு பஸ்சை நிறுத்திவிட்டு இருவரும் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது பஸ்சில் இருந்த பயணி ஒருவர், பஸ்ைச எப்போது எடுப்பீர்கள் என கேட்டார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கண்டக்டரும், டிரைவரும் அந்த பயணியை ஆபாசமாக திட்டியதோடு தாக்கினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டல பொது மேலாளர் சிங்காரவேலு விசாரணை நடத்தினார். பின்னர் பயணியை தாக்கியது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் பஸ்சை இயக்காமல் தாமதப்படுத்தியதாக டிரைவர் ஜெயராமு, கண்டக்டர் மயில் பாண்டியன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்