தட்டிக் கேட்ட பெற்றோர் மீது தாக்குதல்

10-ம் வகுப்பு மாணவியிடம் ஆபாச பேச்சு தட்டிக் கேட்ட பெற்றோர் மீது தாக்குதல் வாலிபர் உள்பட 4 பேர் மீது வழக்கு

Update: 2022-10-08 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று அங்குள்ள கடை அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த கோதண்டபாணி மகன் பாண்டியன்(வயது 24) என்பவர் சிறுமியை தனியாக அழைத்து சென்று அவளிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பாண்டியன் வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டபோது பாண்டியன், அவரது உறவினர்கள் சிறுமியின் பெற்றோரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் மற்றும் அவரது உறவினர் கலா ஆகியேர் மீது அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சிறுமியின் பெற்றோர் பாண்டியனை தாக்கியதாக அவரது தந்தை கோதண்டபாணி கொடுத்த புகாரின் பேரில் சிறுமியின் உறவினர்கள் 4 பேர் மீது திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்