சங்கராபுரம் அருகேஊராட்சி மன்ற துணை தலைவர் மீது தாக்குதல்6 பேர் மீது வழக்கு
சங்கராபுரம் அருகே ஊராட்சி மன்ற துணை தலைவரை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள ச.செல்லம்பட்டு ஊராட்சியில் கடந்த மாதம் 21-ந் தேதி ஊராட்சி மன்ற தலைவர் ஊரகவேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிக்கு வராத 10-க்கும் மேற்பட்ட நபர்களை பணிக்கு வந்ததாக முறைகேடாக பதிவு செய்து அரசு பணத்தை கைப்பற்ற திட்டமிட்டு வந்ததாக தெரிகிறது. இது குறித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சபரி(வயது 35) சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேற்பார்வையாளரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் இந்த முறைகேடு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சங்கராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நின்றுகொண்டிருந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சபரியை அதே ஊரை சேர்ந்த முத்தமிழரசன், கோகுலன், ரகுராம், கவியரசன், தனசேகர், கலைச்செல்வி ஆகியோர் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சபரி கொடுத்த புகாரின் பேரில் முத்தமிழரசன் உள்பட 6 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.