ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்; வாலிபர் கைது

ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-24 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரும்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மருதுபாண்டி(வயது 32). பெரும்பட்டு ஊராட்சி மன்ற தலைவரான இவர் திருநாவலூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் பெரும்பட்டு கிராமத்தில் உள்ள முருகன் கோவில் தெருவில் வாய்க்கால் அமைக்கும் பணியை பார்வையிட சென்ற மருதுபாண்டியை அதே கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் குணசேகர்(39), முருகன் மனைவி சிவசக்தி(43) உள்ளிட்ட சிலர் வாய்க்கால் அமைக்கும் பணியை செய்யக்கூடாது என கூறி, அவரை பணி செய்ய விடாமல் தடுத்து ஆபாசமாக திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து மருதுபாண்டி கொடுத்த புகாரின் பேரில் குணசேகர் உள்பட 4 பேர் மீது திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதில் குணசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்