இட்லி கடைக்காரர் மீது தாக்குதல்; வாலிபர் கைது
நெல்லையில் இட்லி கடைக்காரர் மீது தாக்குதல் நடந்தது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை கொக்கிரகுளம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 39). சந்திப்பு அண்ணா நகரை சேர்ந்தவர் கருப்பசாமி (35). இவர்கள் 2 பேரும் நெல்லை சந்திப்பு -மதுரை ரோட்டில் அருகருகே சாலையோர இட்லி கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வியாபார போட்டியில் ஏற்பட்ட பிரச்சினையில் கருப்பசாமி ஆத்திரம் அடைந்து முத்துராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் நாற்காலி மற்றும் மேஜைளை சேதப்படுத்தி உள்ளார். இதுகுறித்து சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.