அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்

அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-09-07 18:38 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரிலிருந்து ஆற்காட்டிற்கு செல்லும் அரசு டவுன் பஸ் கடந்த சில நாட்களாக தகரக்குப்பம் கிராமத்திற்கு சென்று ஆற்காட்டுக்கு செல்லுகிறது. நேற்று காலை சோளிங்கரிலிருந்து ஆற்காட்டிற்கு ரெண்டாடி வழியாக சென்று தகர குப்பம் கிராமத்திற்குள் சென்று திரும்பி வந்தது. அப்போது தகரகுப்பம் பஸ் நிலையம் அருகில் பஸ்சில் ஏறிய 2 பேர் பஸ் தகரகுப்பம் சென்று வருவதால் எங்களுக்கு இடம் இல்லை என்று டிரைவர் பாஸ்கருடன் (55) தகராறு செய்து அவரை தாக்கி உள்ளனர்.

உடனடியாக சோளிங்கர் பணிமனைக்கு தகவல் கொடுத்து வேறு டிரைவரை வரவைத்து பஸ்சை ஓட்டி சென்றனர். பாஸ்கர் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் டிரைவர் பாஸ்கர் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்