கபிஸ்தலம்
கபிஸ்தலம் அருகே அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தாக்குதல்
சென்னையிலிருந்து திருவையாறு செல்லும் அரசு பஸ் கடந்த 9-ந்தேதி சுவாமிமலையை அடுத்த மேலக்கொட்டையூர் வழியாக திருவையாறுக்கு சென்றது. இந்த பஸ்சில் மேலக்கொட்டையூரை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருண்பாண்டியன் (வயது30) என்பவர் பயணம் செய்துள்ளார். அப்போது மேலக்கொட்டையூரில் பஸ்சை நிறுத்த வேண்டும் என அருண்பாண்டியன் கண்டக்டரிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் கண்டக்டர் இந்த பஸ் மேலக்கொட்டையூரில் நிற்காது என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அருண்பாண்டியன், அரசு பஸ் கண்டக்டர் குமார் (45) என்பவரை தாக்கி அவரை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார்.
கைது
இதுகுறித்து சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் கண்டக்டர் குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்திவு செய்து பஸ் கண்டக்டரை தாக்கிய அருண்பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.