மின்வாரிய ஊழியர் மீது தாக்குதல்

வேடசந்தூர் அருகே மின்வாரிய ஊழியர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-23 19:15 GMT

வேடசந்தூர் அருகே உள்ள புதுஅழகாபுரியை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 35). மின்வாரிய ஊழியர். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் (49), ஜெகதீசன், மதுரையை சேர்ந்த சுரேஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசினர். பின்னர் அவர்கள் சரவணக்குமாரை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய வீட்டின் கண்ணாடி ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த சரவணக்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து கூம்பூர் போலீஸ்நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம், ஜெகதீசன் ஆகியோரை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள சுரேசை வலைவீசி தேடி வருகிறார்.  

Tags:    

மேலும் செய்திகள்