வயதான தம்பதி மீது தாக்குதல்

சாத்தான்குளம் அருகே வயதான தம்பதி மீது தாக்குதல் நடத்திய டிரைவரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2022-12-15 18:45 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகேயுள்ள துவர்க்குளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 72). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் மகாலிங்கம் மகன் பட்டாணித்துரை (30) என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு இடப்பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பொன்னுச்சாமியும், அவரது மனைவி ஜெயராணியும் அப்பகுதியில் உள்ள கோவில் அருகே நடந்துசென்று கொண்டிருந்தனர். அங்கு வந்த பட்டாணித்துரை, பொன்னுச்சாமியை வழிமறித்து அவதூறாக பேசியதுடன் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதை தடுக்க முயன்ற ஜெயராணியையும் அவர் தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதில் காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்சன் வழக்குப்பதிவு செய்து பட்டாணித்துரையை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்