இறைச்சி கடைக்காரர் மீது தாக்குதல்; 2 பேர் கைது

நெல்லையில் இறைச்சி கடைக்காரரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-08 20:40 GMT

நெல்லை பெருமாள்புரம் இலந்தைகுளத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 39). இவர் அந்த பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தம் அருகே இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் இலந்தைகுளத்தை சேர்ந்த பச்சக்கிளி (36) என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கடனுக்கு கறி வாங்கினார். ஆனால் அதற்கான பணத்தை கொடுக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் பச்சக்கிளியிடம் முத்துராஜ் பணம் கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து பச்சக்கிளி, சுடலைக்கண் என்பவருடன் சேர்ந்து முத்துராஜை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சக்கிளி, சுடலைக்கண் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்