அ.தி.மு.க.வினர் மீது தாக்குதல்
அ.தி.மு.க.வினர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் நடந்து கொண்டிருந்த போது தி.மு.க.வை சேர்ந்த 6 பேர் அ.தி.மு.க. தொண்டர்கள் மீது கற்களை வீசி தாக்கியதுடன், தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இரு பிரிவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே முன்னாள் அமைச்சரை வரவேற்க வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்தாக கூறப்படுகிறது. இ்ந்த சம்பவம் குறித்து அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் நவரத்தினம் தலைமையில் அ.தி.மு.க.வினர் தளவாய்புரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.