பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து மாணவர் மீது தாக்குதல்

நெய்வேலியில் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து மாணவர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-21 19:25 GMT

நெய்வேலி, 

நெய்வேலி அருகே உள்ள வடக்கு மேலூர் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவர் இந்திரா நகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் நேற்று பள்ளிக்கூடத்தில் இருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த திருமுருகன், எலி என்கிற சந்துரு, கைலாஷ், சரவணன் ஆகிய 4 பேரும் மாணவரை சரமாரியமாக தாக்கியதாக தெரிகிறது.

இதில் காயமடைந்த மாணவர் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் திருமுருகன் உள்பட 4 பேர் மீதும் டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்