திண்டிவனம் அருகே லாரி டிரைவர் உள்பட 6 மீது தாக்குதல் 8 பேர் மீது வழக்குப்பதிவு

திண்டிவனம் அருகே லாரி டிரைவர் உள்பட 6 மீது தாக்கிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-05 18:45 GMT


திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த ராவணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 75). இந்த நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த செந்தாமரை மகன் கார்த்தி என்பவர் அந்த பகுதியில் காரை நிறுத்தினார். அப்போது, அந்த வழியாக பாலமுருகன் தம்பி பார்த்திபன் என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.

இந்தநிலையில், கார்த்தியிடம் காரை ஓரமாக நிறுத்து மாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி, சுப்பிரமணி, நாகராஜ், அருண், அஜித், ரஞ்சித், அன்பு, அமுதா ஆகியோர் சேர்ந்து பாலமுருகன், குப்புசாமி, பார்த்திபன், ஆறுமுகம், அலமேலு, நாகராஜ் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந் பாலமுருகன் தரப்பை சேர்ந்த 6 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கார்த்தி தரப்பை சேர்ந்த 8 பேர் மீது பிரம்மதேசம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்