பெண் உள்பட 2 பேர் மீது தாக்குதல்

பெண் உள்பட 2 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

Update: 2022-11-29 18:36 GMT

திருச்சி டவுன்ஹால் பகுதியை சேர்ந்தவர் சையது சாதிக்(வயது 44). இவா் திருச்சி வயலூர் ரோடு கீதா நகர் பஸ்நிறுத்தம் பகுதியில் செருப்பு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் திருச்சி நடுத்தெரு நாச்சிக்குறிச்சி பகுதியை சேர்ந்த காயத்ரி(20) வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று செருப்பு வாங்க வந்த 2 பேர் செருப்பை திருடிச் சென்றதாகத் தெரிகிறது. இதைக் கண்ட சையது சாதிக் மற்றும் காயத்ரி ஆகியோர் அவர்களை தட்டிக்கேட்டனர். உடனே அவர்கள் தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். மேலும் செருப்பை திருடியவா்கள் மரக்கட்டையால் அவர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சையது சாதிக் மற்றும் காயத்ரி ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்