வால்பாறையில் தகராறில் 2 பேர் மீது தாக்குதல்- 5 பேர் கைது

வால்பாறையில் தகராறில் 2 பேர் மீது தாக்குதல்- 5 பேர் கைது

Update: 2023-01-02 18:45 GMT

வால்பாறை

கோவை மாவட்டம் வால்பாறை அருகில் உள்ள பச்சைமலை எஸ்டேட் பகுதியில் கால்பந்து விளையாட்டு நடந்தது. அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறில் பச்சைமலை எஸ்டேட்டை சேர்ந்த செல்வக்குமார் (வயது 38) என்பவரை கருமலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த திலகராஜா (23), விக்னேஸ்வரன் (21), ஆனந்தராஜ் (28), மூவேந்தர் (21) ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கினர். இதில் படுகாயமடைந்த செல்வக்குமார் வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தகராறில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

இதேபோல் வால்பாறை சிறுவர் பூங்காவைச் சேர்ந்த மணிகண்டபிரபு (30) மற்றும் மகேஷ்வரன் (20) இருவரும் குடிபோதையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் மணிகண்டபிரபுவை மகேஷ்வரன் கல்லால் அடித்து தாக்கினார். இதில் படுகாயமடைந்த மணிகண்டபிரபு கொடுத்த புகாரின் பேரில் மகேஷ்வரனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்