கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள கனகமுட்லு பக்கமுள்ளது மோட்டூர் காலனி. இந்த ஊரை சேர்ந்தவர் முனிகண்ணன் (வயது 75). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் அருதி (24). 2 பேரும் உறவினர்கள். இவர்களுக்குள் நிலம் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி அவர்கள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் முனிகண்ணனை, அருதி தரப்பினர் தாக்கினர். இதில் காயம் அடைந்த முனிகண்ணன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அருதி, ராதாகிருஷ்ணன் (28), மூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அதே போல அருதி ஒரு புகார் கொடுத்தார். அதில் தன்னை முனிகண்ணன் தரப்பினர் நில பிரச்சினையில் தாக்கி விட்டதாக கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் முனிகண்ணன், நாகம்மாள், சக்திவேல் (25) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.