தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்
தேன்கனிக்கோட்டை அருகே தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்கிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தாவரக்கரை கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 28). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த சிலர் சரமாரியாக தாக்கினர். இதில் மாதேஷ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகாரின்பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.