செஞ்சி,
செஞ்சியில் வட்டார வேளாண்மை துறை சார்பில் அட்மா குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
இதில் வேளாண் வளர்ச்சி பணிகள் குறித்தும், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படும் கிராமங்களில் வேளாண் கருவிகள் மற்றும் இடுபொருட்கள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை பிரகாஷ், வேளாண் செயற்பொறியாளர் மணிவண்ணன், கால்நடைத்துறை சரவணன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்ரீதேவி மற்றும் வேளாண் அலுவலர்கள், அட்மா குழு தலைவர் வாசு மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.