ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது
வெறையூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வாணாபுரம்
திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே தென்மாத்தூர் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமாரின் மகன் உபேந்திரன் (வயது 20). இவர், மதுபானத்தை குடித்து விட்டு போதையில் அதே பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரையால் குத்தி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உபேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.