ஏ.டி.எம். மையத்தில் செல்போனை விட்டுச்சென்ற பெண்

நாகர்கோவிலில் ஏ.டி.எம். மையத்தில் விட்டுச்சென்ற செல்போனை போலீசார் கண்டுபிடித்து பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

Update: 2023-08-01 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் ஏ.டி.எம். மையத்தில் விட்டுச்சென்ற செல்போனை போலீசார் கண்டுபிடித்து பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

நாகர்கோவில் மத்தியாஸ் வார்டு பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் நேற்று மாலையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் பணம் எடுக்கச் சென்றார். அப்போது அங்கு ஒரு ஸ்மார்ட் போன் கிடந்தது. அதை எடுத்து வந்து அருகில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகனிடம் கொடுத்தார். அவர் அந்த செல்போனை வாங்கி, அதில் உள்ள தொடர்பு எண்கள் மூலம் விசாரித்தபோது அந்த செல்போன் நாகர்கோவில் மேலஆசாரிபள்ளத்தை சேர்ந்த அஜிதா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அஜிதாவுக்கு தகவல் தெரிவித்து, செல்போனை கோட்டாரில் உள்ள போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு வந்து பெற்று செல்லுமாறு கூறினார்.

இதையடுத்து அஜிதா நேற்று இரவு போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு வந்து செல்போனை அடையாளம் காண்பித்து, எழுதி கொடுத்துவிட்டு வாங்கிச் சென்றார். செல்போன் கிடைத்த மகிழ்ச்சியில் அவர் போலீசாருக்கும், போலீசாரிடம் எடுத்துக்கொடுத்த 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்