ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடி உடைப்பு

வேடசந்தூரில், ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-07-23 15:17 GMT

வேடசந்தூர் சாலைத்தெருவில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்திலேயே, அதே வங்கியின் ஏ.டி.எம். மையமும் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு சென்றனர். அதன்பிறகு அங்கு வந்த மர்ம நபர்கள், ஏ.டி.எம். மையத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு சென்று விட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள், கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு ெசய்து மர்ம நபர்களை பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் லட்ச கணக்கில் பணம் வைக்கப்பட்டிருந்ததாகவும், கண்ணாடியை மட்டும் உடைத்து விட்டு மர்ம நபர்கள் சென்றதால் அந்த பணம் தப்பியதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் வேடசந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்