ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
கோவை
கோவை ஆர்.எஸ்.புரம். காந்தி பார்க் ரவுண்டானா அருகே எஸ்.பி. ஐ.வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நள்ளிரவில் ஒரு கொள்ளையன் உள்ளே புகுந்தான். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை இழுத்தால் அபாய மணி ஒலித்தது. இது தொடர்பாக மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கும் தகவல் கிடைத்தது.
அதனால் இதுகுறித்து உடனடியாக ஆர்.எஸ் புரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப் -இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புதுக்கோட்டை, நேரு நகரை சேர்ந்த வனராஜா (வயது 33) என்பதும், ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை அடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.