குலசேகரன்பட்டினத்தில் ஆடிக்கொடைவிழா:முத்தாரம்மன் கோவிலில் கும்பம்திருவீதி எழுந்தருளல்

குலசேகரன்பட்டினத்தில் ஆடிக்கொடைவிழாவை முன்னிட்டு முத்தாரம்மன் கோவிலில் கும்பம் திருவீதி எழுந்தருளல் நடந்தது.

Update: 2023-08-01 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடி கொடை விழாவில் நேற்று கும்பம் திருவீதி எழுந்தருளல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெசய்தனர்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடை விழா கடந்த 31-ந்தேதி இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்கியது. இரவு 10 மணிக்கு வில்லிசை நடைபெற்றது. நேற்று காலை 7 மணி, காலை 8.30 மணி, மாலை 5 மணி, இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பகல் 10 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், பகல் 11.15 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணி, இரவு 7 மணிக்கு அன்னதானம், இரவு 8 மணிக்கு வில்லிசை, இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல் ஆகியவை நடைபெற்றது.

இன்று மஞ்சள் நீராட்டு விழா

இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு சிற்றுண்டி அன்னதானம், காலை 9 மணிக்கு சிறப்பு மகுடம், காலை 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல் காலை 11.30 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகிறது. கொடை விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆலோசனையின் படி திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் 9 இன்ஸ்பெக்டர்கள், 34 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்