பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டி

மாவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டி நடைபெற்றது.

Update: 2023-03-24 14:47 GMT

திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் 6-வது மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் இந்த போட்டிகளில் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதிலும் இருந்து 30 பள்ளிகளை சேர்ந்த 1,200 மாணவ-மாணவிகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர். தொடக்க நாள் போட்டிகளை திருச்சி மாவட்ட சிறுவர்கள் விளையாட்டு மேம்பாட்டு கழக தலைவர் சாமுவேல் பால்தேவகுமார், செயலாளர் கருணாகரன் தொடங்கி வைத்தனர். நேற்று 3,4 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கான போட்டிகள் நடந்தன. இன்று (சனிக்கிழமை) 1,2 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கான போட்டிகள் நடக்கின்றன.

........

Tags:    

மேலும் செய்திகள்