பள்ளி மாணவர்களுக்கு தடகள போட்டி
வடக்கன்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கு தடகள போட்டி நடந்தது.
வடக்கன்குளம்:
வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், வள்ளியூர் வட்டார அளவில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடந்தது. வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், மாணவ சமுதாயம் போதை பழக்கத்தில் இருந்து விடுபட விளையாட்டு போட்டிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
இதில் வள்ளியூர் வட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெபராஜ், பள்ளி தாளாளர் திவாகரன், புவனேஸ்வரி கிரகாம்பெல், சுடலையாண்டி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.