விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தலைச்சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுகள் மட்டும்), பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டுத்திட்டம் ஆகிய 3 வகைகளில் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டினை சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்று பதக்கம் வென்றிருக்க வேண்டும். இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை வருகிற 15-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே அஞ்சல் வழியில் நேரடியாக விண்ணப்பித்து இருந்தாலும் மீண்டும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.