வேளாங்கண்ணியில், சிலுவை பாதை ஊர்வலம்

ஆண்டு திருவிழாவையொட்டி வேளாங்கண்ணியில் சிலுவை பாதை ஊர்வலம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Update: 2022-09-02 16:53 GMT

வேளாங்கண்ணி,

ஆண்டு திருவிழாவையொட்டி வேளாங்கண்ணியில் சிலுவை பாதை ஊர்வலம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஆண்டு திருவிழா

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலய ஆண்டு திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிதழ்ச்சியான பெரிய தேர்பவனி 7-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. மாதாவின் பிறந்த நாள் விழா 8-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

சிலுவை பாதை ஊர்வலம்

இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள் மூலம் வந்து குவிந்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.ஆண்டு திருவிழாவையொட்டி நேற்று புனித பாதையில் சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது கொங்கனி, தமிழ், ஆங்கிலம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் ஏசுவின் பாடுகளை நினைவுகூர்ந்து பிரார்த்தனை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்