மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபி
கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கோபி ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். காலை உணவு திட்டத்தை பள்ளி சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூ.7,600 வழங்கவேண்டும், ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும், சத்துணவு திட்டத்தில் உள்ள 50 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊழியர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
அந்தியூர்
அந்தியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார சத்துணவு ஊழியர் சங்க தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நம்பியூர்
நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். சங்கத்தின் வட்ட தலைவர் முருகையன், செயலாளர் பூங்கோதை, பொருளாளர் அம்பிகாபதி, ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் சங்க நம்பியூர் வட்டார செயலாளர் பழனிச்சாமி மற்றும் சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
பவானிசாகர்
பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் சரிதா தலைமை தாங்கினார். 50 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர்