உத்தமபாளையத்தில் ஊராட்சி அலுவலர்களுக்கு மருத்துவ முகாம்

உத்தமபாளையத்தில் ஊராட்சி அலுவலர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-12-09 18:45 GMT

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உடல் நலனை பரிசோதிக்கும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, உத்தமபாளையம் அரசு மருத்துவமனை டாக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். அரசு அலுவலர்களுக்கு, இ.சி.ஜி., ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு மருத்துவ குழுவினர் ஆலோசனை வழங்கினர். முகாமில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செண்பகவல்லி, ஜெயகாந்தன், அலுவலக கண்காணிப்பாளர் தவராஜா மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் உள்பட பலர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்