உடன்குடி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி முகாம்

உடன்குடி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி முகாம்

Update: 2023-04-23 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி கீழபஜாரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு உடன்குடி அரசு கிளை நூலகம் சார்பில் மாணவமாணவிகளுக்கு புத்தக வாசிப்பு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. பள்ளி தலைமைஆசிரியர் பிரின்ஸ் தலைமையில் மாணவ, மாணவிகள் 50 பேர ்உறுப்பினர்களாக சேர்க்கப் பட்டனர். இவ் விழாவில் வாசகர் வட்ட தலைவர் பார்வதிசங்கர், நூலகர் ராதா கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் செல்வி, மகாலிங்கம், யமுனா, பராசக்தி, ஞான சேகர், பிருந்தா, சுகன்யா, கலைவாணி, இசக்கியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்